வைரச்சுரங்கத்தில் வைரங்களை வெட்டி எடுக்கும் பணிகளுக்கான ஒப்பந்தமானது தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்துக்கு கிடைத்துள்ளது

0 695

மத்திய பிரதேசத்திலுள்ள வைரச்சுரங்கத்தில் வைரங்களை வெட்டி எடுக்கும் பணிகளுக்கான, பலகோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மத்திய அரசின் தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்துக்கு கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஆசியாவின் ஒரே வைர சுரங்கத்தில் வைரங்களை வெட்டியெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ரியோ டிண்டோ நிறுவனம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பால் சுரங்கத்தை விரிவுபடுத்த முடியாமல் பணிகளை கைவிட்டது.

டெகடந்த 14 ஆண்டுகளில் மட்டும் அங்கிருந்து 10 லட்சம் காரட் அளவுக்கு வைரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலவகையான விலங்குகள் வசிக்கும் வனப்பகுதியில் சுரங்கத்தை விரிவுபடுத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ரியோ டிண்டோ நிறுவனம் கைவிட்ட பணிகளுக்கான ஒப்பந்தம், தற்போது தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் லட்சக்கணக்கான காரட் அளவுக்கு வைரங்கள் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments