ஈரான் வான் பரப்பை முழுமையாக தவிர்க்க ஐரோப்பிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

0 794

ஈரான் வான்பரப்பு வழியே பறப்பதை முழுமையாக தவிர்க்கும்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இத்தகைய அபாயங்களை தவிர்க்க, ஈரான் வான்பரப்பில் 25 ஆயிரம் அடி உயரத்துக்கு கீழ் பறக்க வேண்டாம் என  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ஈரான் நேற்று அறிவித்தது. இதையடுத்து, ஈரான் வான் பரப்பை முற்றாக தவிர்க்கும்படி ஐரோப்பிய ஒன்றிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (EU Aviation Safety Agency), விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments