969 காவல் உதவி ஆய்வாளர் பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், 969 உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 32 மையங்களில் நடைபெற்றது.
இரு பிரிவாக நடத்தப்படும் இதில் பொதுப்பிரிவினருக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. சென்னையில் மீனாட்சி மகளிர் கல்லூரி, காயிதேமில்லத் கலைக்கலூரி, உள்ளிட்ட கல்லூரி மையங்களில், ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினர். கடுமையான சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் 32 மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 448 பேர் தேர்வு எழுதினர். நாளை நடைபெறும் காவல் துறை பிரிவினருக்கான தேர்வில், 17 ஆயிரத்து 561 பேர் பங்கேற்கின்றனர்.
Comments