குடியுரிமைச் சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
குடியுரிமை சட்ட மசோதாவை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார். பின்னர் எந்த மாநிலமும் அதை எதிர்க்க முடியாது எனக் கூறிய நக்வி, இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் இந்த சட்டம் எந்த இந்திய குடிமகனையும் பாதிக்காது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தச் சட்டம் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமையை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
Comments