பொங்கல் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் கட்டணத்தில் சலுகை

0 1002

அரசு பொது விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய நாட்களில் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில், மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது 2020ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும். அதன்படி பொங்கல் அரசு விடுமுறை நாட்களான வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளிலும் இச்சலுகை வழங்கப்பட இருக்கிறது.

மேலும் காணும் பொங்கல் நாளன்று அரசினர் தோட்டம் மற்றும் ஏஜி.டிஎம்எஸ் மெட்ரோ இரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக காலை முதல் இரவு வரை சீருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த சலுகைகளையும், வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments