தமிழர்களும், சிங்களர்களும் ஆதி திராவிடர்களே - இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

0 691

தமிழர்களும், சிங்களர்களும் ஆதி திராவிடர்களே என மரபணு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மேடையில் பேசிய விக்னேஸ்வரன், தமிழர்கள் இலங்கையில் சோழர் காலத்தில் குடியேறியவர்கள் என்ற தவறான கருத்து பகிரப்பட்டு வருவதாகவும், இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்க தேவையில்லை என்ற எண்ணம் இலங்கையில் உருவாகியுள்ளது என்றார். மேலும், தமிழர்களின் கட்டிடங்கள், பாரம்பரிய கோவில்கள் அழிக்கப்பட்டு சிங்களம் பெளத்தம் முன்னெடுக்கபடுவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments