சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன

0 1159

பொங்கல் விடுமுறைக்காக நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து இரண்டரை லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து 14 ம்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன்  4 ஆயிரத்து 950  சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. பொங்கலுக்காக 16 ஆயிரத்து 75 பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது.

 இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 11ம் தேதியான நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 4 ஆயிரத்து 904 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 95 பயணிகள் வெளியூர் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments