கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் கிராமங்கள் குளிரில் முடங்கியுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
50 சுற்றுலாப் பயணிகள் பனிபடர்ந்த பகுதிகளில் சிக்கி பாதைகள் மூடப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் கடும் குளிரில் தவிக்கின்றனர். 100 நெடுஞ்சாலைகளில் பனிமூடிக் கிடப்பதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன விபத்துகளில் 32 பேர் காயம் அடைந்தனர். லாம்பர்க், ரிஷிகேஷ் போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் காணப்படுகின்றன. நைனிடால். பாகேஸ்வர், அல்மோரா போன்ற பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
Comments