நீண்ட இனப்பெருக்கத்திற்கு பின் 100 வயது கொண்ட ஆமை அதன் இருப்பிடத்திற்கே அனுப்பப்படுகிறது
அமெரிக்காவில் நீண்ட இனப்பெருக்கத்திற்கு பின் 100 வயது கொண்ட ஆமை ஒன்று அதன் இருப்பிடத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது.
தெற்கு பசிபிக் கடலில் உள்ள காலபாகஸ் தீவு ஆமைகள்தான் உலகிலேயே அதிக நாட்கள் வாழும் உயிரினம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரைமுறையற்ற வேட்டையின் காரணமாக இந்த வகை ஆமைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ விலங்கியல் பூங்காவுக்கு எஸ்பானேலா என்ற இடத்தில் இருந்து காலபாகஸ் பெண் ஆமை ஒன்று கொண்டு வரப்பட்டது.
இந்த ஆமை மூலம் விலங்கியல் பூங்காவில் சுமார் 800 ஆமைகள் பிரசவிக்கப்பட்டன. தற்போது அந்தப் பெண் ஆமை 100 வயதைத் தொட்டு விட்டதால் மீண்டும் எஸ்பானேலா பகுதியில் விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.
Comments