பொங்கல் திருநாள் : போக்குவரத்தில் மாற்றம் செய்து சென்னை காவல்துறை அறிவிப்பு

0 779

பொங்கல் திருநாளையொட்டி, சொந்த ஊர்களுக்கு, லட்சக்கணக்கானோர் செல்வதால், சென்னையில் போக்குவரத்தில், பல்வேறு  மாற்றங்களை செய்து போலீசார் அறிவித்துள்ளனர். 

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் வாகன ஓட்டிகள், இ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் சாலை வழியாக, செங்கற்பட்டு அல்லது திருக்கழுக்குன்றம் வழியாக சென்று, திருச்சி நெடுஞ்சாலையை அடையுமாறு கூறப்பட்டுள்ளது. வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மார்க்கெட் "E" ரோட்டில் உள்ள நிறுத்தத்தில் இருந்து, "B" ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று, அங்கிருந்து வெளிவட்ட சாலை வழியாக வண்டலூர் சென்றடையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் 100 அடி சாலையில், வடபழனி நோக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள், ஸ்ரீவாரி திருமண மண்டபம் பின்புறம் உள்ள சிவாஜி பார்க்கில் நிறுத்திவைக்கப்பட்டு, ஜீசஸ் கால்ஸ் வளாகம் முன்பு உள்ள தற்காலிக நிறுத்தத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாள் போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களிலும், பகல் 2 மணி முதல், நள்ளிரவு 2 மணி வரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னைக்குள் வரும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments