தீயணைப்புத்துறையில் பணிமூப்பு அடிப்படையில் 3 மாதத்தில் பதவி உயர்வு வழங்க உத்தரவு

0 642

தீயணைப்புத்துறையில் பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயாரித்து, 3 மாதத்தில் பதவி உயர்வு வழங்கும்படி, தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

172 பேருக்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து, முதன்மை தீயணைப்பு வீரர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கமான பதவி உயர்வு வழங்கும்வரை தற்காலிக பதவி உயர்வு அமலில் இருக்கும் என அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அவசர காரணத்துக்காக வழங்கப்பட்ட தற்காலிக பதவி உயர்வில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதி, பணிமூப்பு பட்டியலை தயாரித்து 3 மாதத்தில் பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments