வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய பிரிட்டன் இளைஞரை காப்பாற்றிய ஆன்லைன் தோழி..

0 887

பிரிட்டனைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியபோது, 5 ஆயிரம் மைல் தொலைவுக்கு அப்பால் அமெரிக்காவிலிருந்து அவருடன் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த  இளம்பெண் காப்பாற்றியுள்ளார்.

17 வயதான ஏய்டன் ஜாக்சன், செசைரிலுள்ள விட்னஸ் பகுதியிலிருக்கும் தனது வீட்டு மாடியில் இருந்தபடி,    டெக்சாஸை சேர்ந்த தியா லதோரா என்பவருடன் கடந்த 2ம் தேதி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு ஜாக்சன் கீழே விழுந்தார். இது வீட்டின் கீழறையில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த பெற்றோருக்கு தெரியவில்லை.

ஆன்லைனில் விளையாடிய லதோரா தமக்கு ஜாக்சனின் வீட்டு முகவரி தெரிந்த காரணத்தால், பிரிட்டன் போலீஸாருக்கு அதுகுறித்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து 2 கார்களில் விரைந்து வந்து, ஜாக்சனை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments