CAA-வால் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் பதவியை துறந்து போராடுவேன் - அமைச்சர் வேலுமணி
குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் தமிழகத்தில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நொடியே பதவியை துறந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் உள்ள கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கியப் பின்னர் பேசிய அமைச்சர், ஒற்றுமையாக உள்ள மக்களிடையே எதிர்க்கட்சியினர் பிரிவினையை தூண்ட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
Comments