நிர்பயா வழக்கு: நிவாரணம் கோரும் இரு குற்றவாளிகளின் மனுக்கள் மீது 14-ம் தேதி விசாரணை

0 930

நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனையிலிருந்து நிவாரணம் கோரி குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மனுக்கள் (curative petitions) 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயாவை 6 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில்  அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4   பேரையும்  22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் தூக்கிலிருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக,  மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள்,  வரும் 14-ம் தேதி  5 நீதிபதிகள் அமர்வால் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments