ஓமன் சுல்தான் காபூஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0 1032

ஓமன் சுல்தான் காபூஸின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

79 வயதான சுல்தான் காபூஸ் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது. சுல்தான் காபூஸின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் அமைதி நிலவிட சுல்தான் காபூஸ் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது காலத்தில் ஓமன் இந்திய உறவுகள் மேம்பட்டதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஓமனின் இன்றைய வளர்ச்சிக்கு சுல்தான் காபூஸின் தலைமையே முக்கிய காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments