அமித் ஷா போல பேசி ஆளுநரை ஏமாற்ற திட்டம் - விமானப்படை அதிகாரி கைது
உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவதாக கூறி, மத்திய பிரதேச ஆளுநரை ஏமாற்ற முயன்ற விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் விமானப்படை விங் கமாண்டராக இருப்பவர் குல்தீப் வகேலா. இவரது போபாலைச் சேர்ந்த நண்பரும், மருத்துவருமான சந்திரேஷ் குமார் சுக்லா என்பவர், ஜபல்பூர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்து முதல் கட்டத் தேர்வில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விங் கமாண்டர் குல்தீப் வகேலா, அமித் ஷா பேசுவதாகவும், துணைவேந்தர் பதவியை சந்திரேஷ் குமார் சுக்லாவுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டிருக்கிறார்.ஆளுநருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
Comments