கேரள மாநிலம் மராடு பகுதியில் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் தகர்ப்பு

0 1366

கேரள மாநிலம் கொச்சி அருகே மராடு நகராட்சி பகுதியில் கடலோர கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்ட 2 கட்டிடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட எச்2ஓ ((H2O)) ஹோலிபெயித், ஆல்பா ஷெரின், ஜெயின் கோரல்கோவ், கோல்டன் காயலோரம் என்ற 4 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதன்படி, 4 கட்டிடங்களில் ஹோலி பெயித் கட்டிடம் முதலில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

இதையடுத்து ஆல்பா ஷெரின் கட்டிடமும் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. நவீன முறை தகர்ப்பு நடவடிக்கையால், 2 கட்டிடங்களும் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கையாக 200 மீட்டர் சுற்றளவில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எஞ்சிய 2 கட்டிடங்கள் நாளை தகர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments