மந்தமாகும் கார் விற்பனை.. உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை

0 935

 நடப்பு ஆண்டிலும் கார் விற்பனை மிகவும் மந்தமாகவே இருக்கும் என்று  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

2018 ல் 22 லட்சமாக இருந்த கார் விற்பனை கடந்த ஆண்டு  18 லட்சமாக குறைந்தது. புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள், பொருளாதார மந்தம் உள்ளிட்டவற்றால் 2020 ல் கார்களின் விலை 8 முதல் 10 சதவிகிதம் அதிகரிக்கும். எனவே இந்த ஆண்டும் அதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்திருக்கிறார். 

இந்த நிலையில், பல கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி,ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணியில் இருந்து விடுவித்துள்ளன. கார் மற்றும் உதிரிபாக தயாரிப்பு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் பாதி அளவாக இருக்கிறது. இந்த துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments