வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்

0 1740

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

18வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் வாக்களிக்கும் இடங்களிலேயே இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதில் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், பட்டியலில் உள்ள விவரங்களை திருத்துதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பங்கள் பெறப்படும்.

காலை 10மணி முதல் மாலை ஐந்தே முக்கால் மணி வரை முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து வாக்காளர் பட்டியலில் தேவையான திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். பின்னர் அவற்றை இணைத்து பிப்ரவரி 14ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments