அமெரிக்க போர்க்கப்பலை விரட்டிச் சென்ற ரஷ்ய போர்க்கப்பல்

0 1905

ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்க போர்க் கப்பலை விரட்டிச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

வடக்கு அரபிக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் 5வது படைப்பிரிவைச் சேர்ந்த யுஎஸ்எஸ் ஃபராகுட் என்ற போர்க் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அதே பகுதியில் ரஷ்யாவுக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

தங்களை நோக்கி வருவதையறிந்த அமெரிக்கக் கப்பல், ரஷ்யக் கப்பலுக்கு எச்சரிக்கை மணியை ஒலித்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாத ரஷ்யக் கப்பல் முன்பைவிட வேகமாக ஃபராகுட் கப்பலை நோக்கி வந்தது.

வெகு அருகாமையில் வந்த பின்னர் சுமார் 180 அடி தூரத்தில் தனது வேகத்தைக் குறைத்த ரஷ்யக் கப்பல் பின்னர் வேறு திசையில் பயணித்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக யுஎஸ்எஸ் சான்சல்லர்வில்லி என்ற அமெரிக்கக் கப்பலை ரஷ்யக் கப்பல் ஒன்று அச்சுறுத்திச் சென்றது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments