காற்றின் வேகத்தில் மேகம் நோக்கி ஈர்க்கப்பட்ட கடல் நீர்
டென்மார்க் அருகே உள்ள தீவில் பாறைகளின் இடுக்கில் கடல் நீர் மேகத்தால் ஈர்க்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ஃபாரோ தீவில் சில சுற்றுலாப் பயணிகள் மலையின் மேல் பகுதியில் இருந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காற்றின் வேகம் அதிகரித்து தூறல் விழுந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென பாறையின் இடுக்கில் இருந்த கடல் நீர் காற்றின் வேகத்தில் மேகத்தால் ஈர்க்கப்பட்டது. இதனால் சுமார் 450 மீட்டர் உயரமுள்ள பெரும்பாறையின் மேல் பகுதியை நோக்கி கடல் நீர் இழுத்துச் செல்லப்பட்டது.
வழக்கமாக மலையில் இருந்து அருவிநீர் கொட்டுவதைக் கண்ட தாங்கள், புவியீர்ப்பு விசைக்கு எதிராக அருவி ஒன்று கீழிருந்து மேலாக பாய்வது போல் உணர்ந்ததாக சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்டனர்.
Comments