செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் வேகமாக மறைந்து வருவதாக ஆய்வில் தகவல்

0 1069

எதிர்பார்த்ததை விட செவ்வாய் கிரகம் தன்னிடமிருக்கும் தண்ணீரை வேகமாக இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் பிரான்சின் சிஎன்ஆர்எஸ் எனப்படும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் உள்ள வளிமண்டலத்தில் நீருக்கான மூலக்கூறுகள் படிப்படியாக குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

நீருக்கான வேதியியல் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களாக சூரிய ஒளி பிரித்துவிடுவதாகவும், செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ஈர்ப்பு விசையால் வேகமாக ஆவியாகி விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் வளிமண்டலத்தில் 80 கிலோ மீட்டர் உயரத்தில் நீராவி இருந்ததாகவும், எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் நீராவி தற்போது குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments