மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு

0 801

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளார் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 15-ஆம் தேதியில் இருந்து ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், மாவட்ட வாரியாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்த உத்தரவுகள் தனித்தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments