தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்

0 805

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடராஜ பெருமான் அனந்த தரிசனமும் அதனைத் தொடர்ந்து திருவீதி உலா மற்றும் திருநடனக்காட்சியும் விமரிசையாக நடைபெற்றது.

 கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மஹாதேவர் நந்தி வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தோடர் இன பழங்குடியினர், ஆருத்ரா தரிசன தேர் பவனி விழாவையொட்டி, பாரம்பரிய உடையணிந்து ஆடிப்பாடி கொண்டாடினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments