ஆத்தாடி என்னா அடி ஆசிரமவாசி அலறல்….! பொய் புகார் பரிதாபங்கள்
சென்னை தாம்பரம் அருகே சதானந்தா மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யாக புகார் அளித்த ஆசிரம ஊழியரை பெண்கள் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
அய்யோ கொல்றாங்க என்று கத்தி கூச்சலிடும் இவர் தான் தாக்குதலுக்குள்ளான சசிக்குமார்..!
தாம்பரம் அருகே சதானந்த புரத்தில் உள்ள சதானந்த சுவாமிகள் மடத்தில் தங்கியிருக்கும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சிறுவர்கள் பேசும் இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த வீடியோக்களை வெளியிட்டவர் அந்த மடத்திற்கு கடந்த 26 ஆண்டுகளாக சென்று வந்த சசிக்குமார் என்று கூறப்பட்டது. அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்ட 8 சிறுவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து மடம் செயல்படுகிறதா அல்லது இழுத்து மூடிவிட்டார்களா ? என்று நோட்டமிட வந்த சசிக்குமாரைக் கண்டதும், மடத்திற்கு வந்து செல்லும் பெண் பக்தர்கள் கொதித்தெழுந்தனர். "மடத்தில் நடக்காத சம்பவத்தை எப்படி சமூக வலைதளங்களில் வீடியோவாக பரப்பினாய்" என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அடைமழை பொழிவது போல அடி மழை இடியாக இறங்கியது. பெண்கள் தங்கள் ஆத்திரத்தை கைகளாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் சசிகுமார் மீது காட்டினர்.
விழுந்த அடியால் வலிதாங்க முடியாமல் அலறிக் கொண்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டான் சசிக்குமார்
அடி மழை அடங்கியதும், தனது தவறான பழக்கத்தை மடத்தில் உள்ள நிர்வாகிகள் கண்டித்ததால், சில சிறுவர்களை அழைத்து பேசவைத்து அதனை கொண்டு, அந்த சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் நடப்பது போல தகவல் பரப்பியதாக சசிக்குமார் ஒப்புக் கொண்டான்.
சிலர் தங்கள் கையில் இருக்கும் செல்போனையும் அதில் உள்ள காமிராவையும் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் இது போன்ற பொய்களையும் வதந்திகளையும் பரப்புவதில் அதீத ஆர்வம் கட்டுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை..!
Comments