இங்கிலாந்தில் அரியவகை வெள்ளைக் காண்டாமிருகம் குட்டி ஈன்றது
இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் அரியவகை வெள்ளைக் காண்டாமிருகம் ஒன்று குட்டி ஈன்றுள்ளது. எஸக்ஸ் பகுதியில் உள்ள கோல்செஸ்டர் விலங்கியல் பூங்காவில் மிகவும் அரிதான பெண் வெள்ளைக் காண்டாமிருகம் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 16 மாதங்களாக கர்ப்பமாக இருந்ததால் இதனை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி இந்தக் காண்டாமிருகம் பெண் குட்டியை ஈன்றது.
சிசிடிவில் பதிவான இக்காட்சியில் பிறந்த சில நொடிகள் அமைதியாக இருந்த குட்டி, அடுத்த சில நிமிடங்களில் எழுந்து உற்சாகமாக நடக்கத் தொடங்கியது. தற்போது தாயும், குட்டியும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்த விலங்கியல் பூங்கா அதிகாரிகள், தொடர்ந்து அரிய வகை விலங்குகளை இனப்பெருக்கம் மூலம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Comments