தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைக்காக 110 குண்டங்கள் அமைக்கும் பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து நடைபெறுகிறது.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 5- ஆம் தேதி நடக்கிறது. கடந்த மாதம் 2-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பகுதியில் தற்போது குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைக்காக மொத்தம் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்படுகின்றன.பெரியகோவிலில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை பொங்கல் பண்டிகைக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Comments