ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி..
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் பல ஊர்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் உள்ள ஆண்டிமடம் ஒன்றியம், சிவகங்கையில் 8 ஒன்றியங்கள், ராமநாதபுரத்தில் 5 ஒன்றியங்கள், திருவள்ளூரில் 3 ஒன்றியங்கள், தேனியில் 4 ஒன்றியங்கள், தஞ்சாவூர் 3 ஒன்றியங்கள், விருதுநகரில் 3 ஒன்றியங்கள், நாமக்கலில் 4 ஒன்றியங்கள், திருவாரூரில் 5 ஒன்றியங்கள் ஆகியவற்றில் போட்டி உள்ளது.
திருச்சியில் 2 ஒன்றியங்களிலும்,திருப்பூரில் 4 ஒன்றியங்களிலும், கோவையில் 6 ஒன்றியங்களிலும், நாகப்பட்டினத்தில் 3 ஒன்றியங்களிலும் போட்டி நிலவுகிறது.
கன்னியாகுமரியில் 7 ஒன்றியங்கள், ஈரோட்டில் 5 ஒன்றியங்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலும், கடலூரில் 6 ஒன்றியங்களிலும் யார் பதவிக்கு வரும் என்பதில் போட்டி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஒன்றியங்களிலும், பெரம்பலூர், நீலகிரியில் தலா ஒரு ஒன்றியங்களிலும் போட்டி நிலவுகிறது.
மதுரை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், புதுக்கோட்டையில் 5 ஒன்றியங்களிலும், தர்ம புரியில் 6 ஒன்றியங்களிலும் தலைவர், துணைத் தலைவர் பதவி யாருக்கு என்பதில் கடும் போட்டி உருவாகி உள்ளது.
Comments