இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 2ம் வாரத்தில் வெளியிட தீவிர முயற்சி - சத்யபிரதா சாகு

0 1328

இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னையில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப்போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஜனவரி 11,12ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாகவும், ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெயர் நீக்கம், சேர்ப்பு உள்ளிட்டவற்றிற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments