உண்மையிலேயே பும்ரா மிக அருமையான பந்து வீச்சாளர்- புகழும் ஆரோன் பின்ச்

0 1153

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த வாரம் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, காயம் காரணமாக எடுத்த ஓய்வு முடிந்து மூன்று மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். சிறப்பான பவுலிங் மூலம் பும்ரா ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் குறித்து ஆஸ்திரேலிய அணியினர் எச்சரிக்கையாகவே உள்ளனர்.

பும்ராவின் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அணி கேப்டன் பின்ச், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை காண ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.எனவே பும்ராவின் வருகையை மிகையாக கருதாமல் இருப்பதே, தற்போது எங்கள் அணிக்கு மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். பும்ராவை நாளுக்கு நாள் நிறைய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்கின்றனர்.

பும்ராவை அதிகமாக எதிர்கொள்ளும் போது தான் அவர் எப்படி பவுலிங் செய்கிறார் என்பது புரியவரும். எனவே இப்போதைக்கு பும்ராவின் பவுலிங் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என கூறியுள்ளார்.

உண்மையிலேயே பும்ரா நல்ல அருமையான பந்து வீச்சாளர். அவருக்கு எதிராக விளையாடாதபோது, அவர் வேகம் மற்றும் ஆக்ரோஷமாக பந்து வீசுவதை பார்ப்பது மிக பிடிக்கும். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் வரிசையில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சவாலுக்கு மனதளவில் தயாராகி வருகிறோம் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments