நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டவரை கேரளாவில் படகில் சிறைவைத்தது தொடர்பாக 4 பேர் கைது
நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டவரை கேரளாவில் படகில் சிறைவைத்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் லெவிட், கடந்த 2013-ம் ஆண்டு வேதியியல் கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றவர்.
இவர் கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக கொச்சிக்கு தனது மனைவியுடன் வந்தார்.
இதனிடையே ஆலப்புழாவில் படகு சவாரிக்காக மைக்கேல் லெவிட், அவரது மனைவி மற்றும் சிலர்,படகில் ஏறி அமர்ந்தனர்.
அன்றைய தினம் கேரளாவில் தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால், போராட்டக்காரர்கள் படகை இயக்க கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் மைக்கேல் லெவிட் அவரது மனைவியுடன் படகிலேயே 5 மணி நேரம் தவித்தார். அதன் பிறகே அவர் படகு சவாரிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
நோபல் பரிசு பெற்றவர் படகில் சிறை வைக்கப்பட்டது, தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Comments