ஆஸ்திரேலியா காட்டுத்தீ - 2.5 லட்சம் பேர் வீடுகளை காலி செய்ய அரசு உத்தரவு
வேகமாகப் பரவும் காட்டுத் தீயின் உக்கிரம் ஆபத்தான கட்டத்தை எட்டியதை அடுத்து, வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு,சுமார் இரண்டரை லட்சம் மக்களுக்கு, ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பற்றிப் பிடித்த காட்டுத்தீ ஆஸ்திரேலிய மக்களை வாட்டி வருகிறது. வரும் நாட்களில் தீயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நிலைமையை சமாளிக்க ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறி உள்ளார்.
சுமார் 73 கோடியே 8 லட்சம் ஹேக்டேரில் எரிந்து வரும் காட்டுத் தீயால் 27 பேர் பலியாகினர்.ஒரு கோடிக்கும் அதிகமான மிருகங்களும், பறவைகளும் சாம்பலாகி விட்டன. காட்டுத் தீயால் ஏற்பட்ட இழப்பு சுமார் 2500 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments