பொங்கலை ஒட்டி சென்னை- நெல்லை இடையே சிறப்பு ரயில்

0 795

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை எழும்பூரில் இருந்து 10 ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும் என்றும், நெல்லையில் இருந்து 11-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறு நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து 12-ந்தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும் என்றும், நெல்லையில் இருந்து 18-ந்தேதி மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments