நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

0 1318

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நெல்லை கண்ணன் சர்ச்சைகுரிய வகையில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி அவர் முதலில் பாளையங்கோட்டை சிறையிலும் பின்னர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தினமும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் காலை, மாலை இரு நேரங்களில் கையெழுத்திடவும் 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை கட்டவும் உத்தரவிட்டு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments