ஜம்மு காஷ்மீரில் இணையசேவை முடக்கத்தை நீக்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் இணையசேவை முடக்கத்தை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யும்படி காஷ்மீர் அரசு நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,தனி நபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காக்கவேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமையாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் அரசியல் சாசன சட்டப் பிரிவு 19ன் கீழ் வருவதாக குறிப்பிட்டுள்ளது. அமலில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றி ஒரு வாரத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments