முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம்

0 1012

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், முப்படை தலைமை தளபதி, பிபின் ராவத்துக்கு உதவ 2 இணை செயலாளர், 13 துணை செயலாளர் மற்றும் 22 செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே முப்படை தலைமை தளபதியின் தலைமையில் செயல்படுவதற்காக, ‘ராணுவ விவகாரங்கள் துறை’ என்ற புதிய துறையையும் மத்திய அரசு உருவாக்கியது.

இந்த துறை மூன்று படைகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என்றும், படைகளுக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பணிகளும் இந்த துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படைக்கருவிகளை பயன்படுத்துவதை இந்த துறை ஊக்குவிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments