பொங்கலை முன்னிட்டு ஏற்பாடு : சென்னையில் சிறப்பு இணைப்பு பேருந்துகள்

0 1251

பொங்கலை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளன.

வரும் 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கும், வெளியூர் செல்லும் பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையங்களுக்கு மாநகர பேருந்துள் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை 12, 13, 14 ஆகிய 3 நாட்களில் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments