நடப்பு ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என தகவல்
நடப்பு ஆண்டில், இந்திய ரூபாயின் மதிப்பு இதர ஆசிய நாடுகளின் பண மதிப்பை விடஉயர்ந்து நிற்கும் என புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மோசமான பொருளாதார காலகட்டம் கடந்து போய்க் கொண்டிருப்பதால், அடுத்த 12 மாதங்களில், இந்திய ரூபாய் அதிக பட்சம் ஒரு சதவிகித வீழ்ச்சியை மட்டுமே சந்திக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான ராபோபேங்க் தெரிவித்துள்ளது.
அதே சமயம்,இந்தோனேசியாவின் நாணயமான ருப்பையா 7 சதவிகிதமும், தாய்லாந்தின் பாட் 11 சதவிகிதமும், மலேசியாவின் ரிங்கட் 9 சதவிகிதமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று ராபோபேங்க் கணித்துள்ளது.
ஆனால், டி.டி. செக்யூரிட்டீஸ், கோடக் மஹிந்திரா பேங்க் போன்றவை இந்திய ரூபாயின் மதிப்பு இதர ஆசிய நாடுகளின் பணமதிப்பை விட பின்தங்கி விடும் என்று கூறியுள்ளன.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் ரூபாய் மதிப்பு குறையும் என இவை கூறுகின்றன.
Comments