புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் துவங்கியதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல்
புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையரை பணிகள் துவங்கியுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மூன்று மாத காலம் மட்டுமே, உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட வார்டுகளின் மறுவரையறை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துவிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Comments