டாடா சன்ஸ் குழுமத்திற்கு சைரஸ் மிஸ்திரியை மீண்டும் தலைவராக நியமிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை
டாடா சன்ஸ் குழுமத்திற்கு சைரஸ் மிஸ்திரியை மீண்டும் தலைவராக நியமிக்குமாறு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டாடா சன்ஸ் குழும தலைவர் பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம், சந்திரசேகரனின் நியமனம் சட்டவிரோதம் என்றும், மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் அமர்த்துமாறும் உத்தரவிட்டது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி, டாடா சன்ஸ் குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, தீர்பாயத்தின் தீர்ப்பில் தவறுகள் இருக்கலாம் என்பதால், ஒட்டுமொத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
Comments