நெல்லை கண்ணன் மனு மீது அரசுதரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 950

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து கொலை செய்ய தூண்டும் வகையில் பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லை கண்ணன், தாக்கல் செய்த மனு மீது அரசுத்தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி நெல்லைக் கண்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நெல்லை கண்ணனின் ஜாமீன் வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த மனு மீது அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments