முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் மனு அளித்தனர்.
சென்னையிலுள்ள முதல்வரின் இல்லத்துக்கு சென்று அவரை தொழிலாளர் நல அமைச்சர் நிலோபர் கபில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர், இந்திய தவ்ஹித் ஜமாத் நிர்வாகி எஸ்.எம். பாக்கர், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர்.
பின்னர் பேட்டியளித்த அவர்கள், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததாக குறிப்பிட்டனர்.
Comments