இரு பள்ளிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிந்தது போல் போலி ஆவணங்கள் காண்பித்து மோசடி

0 719

சென்னையில் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் அரசு உதவி பெறும் 2 பள்ளிகளில் பணிபுரிந்தது போல் காட்டி ஊதியம் பெற்ற புகாரில் முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எருக்கஞ்சேரி வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளியில் 2018-ஆம் ஆண்டு வரை இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் லூயிஸ் ஆரோக்கியராஜ். இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு வியாசர்பாடி சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியிலும் போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்தது இரு பள்ளிகளிலும் ஊதியம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இரண்டு பள்ளிகளின் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ரோமன் கத்தோலிக்க பள்ளிகள் கூட்டமைப்பின் கண்காணிப்பாளர், வடசென்னை மாவட்ட கல்வி அலுவலராக இருந்த பசுபதி உள்ளிட்ட 7 பேர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments