GoAir நிறுவன விமானம் ஓடுதளத்தை விட்டு புல்வெளியில் தரையிறக்கம்

0 795

கோ ஏர் நிறுவன விமானம் கடந்த ஆண்டு, ஓடுதளத்தை விட்டு புல்வெளியில் தரையிறக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி, 146 பயணிகளுடன் நாக்பூரிலிருந்து பெங்களூரு வந்த கோஏர் நிறுவன விமானம், ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் தரையிறங்கியது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாத போதிலும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தியது.

விமானம் தரையிறங்கிய போது 50 அடி உயரத்தில் பனிமூட்டம் காரணமாக ஓடுதளம் தெளிவாக தெரியாததே இச்சம்பவத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனாலும் விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் டேக் ஆஃப் செய்யுமாறு இடப்பட்ட உத்தரவை செயல்படுத்தாத விமானிகள், தங்கள் தவறை ஒத்துக் கொண்டதால் அவர்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இடைநீக்கம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments