இந்தியா வரும் அமேசான் நிறுவனர் , பிரதமர் மோடியை சந்திப்பார் என தகவல்

0 827

அடுத்த வாரம் இந்தியா வரும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவிலுள்ள சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி, வரும் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. தொழில் வல்லுநர்கள், பலதுறை நிபுணர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும் பங்கேற்கிறார்.

அதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் அரசு உயரதிகாரிகளையும், ஜெப் பெசோஸ் சந்திப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து கேட்ட பொழுது அமேசான் நிறுவனம் தகவலை உறுதிபடுத்த மறுத்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து வரும் போதிலும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சிறு, குறு வியாபாரிகளை பாதிப்பதாக போராட்டங்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments