மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து ஹேரி - மேகன் மெழுகு சிலைகள் அகற்றம்
இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகி வசிக்கப்போவதாக அறிவித்த, இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் மெழுகு சிலைகள், மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரா ரீதியில் தனித்து இயங்க விரும்புவதால், தென் ஆப்பிரிக்காவில் வசிக்க இருப்பதாக பிரிட்டன் இளவரசர் ஹேரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதியினர் கடந்த புதன்கிழமை அறிவித்தனர்.
இது அரச குடும்பத்திலும், பிரிட்டன் மக்களிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரச குடும்பத்தினரின் மெழுகு உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ள லண்டனின் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், மேகன் மற்றும் ஹேரியின் சிலைகளை நீக்கியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Comments