“புகையில்லா பொங்கல்” கொண்டாட பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்
பொங்கல் பண்டிகையை புகையில்லா பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், போகிப் பண்டிகையின் போது பழைய குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழைய பொருட்களை எரிக்கும்போது அதில் இருந்து வெளியாகும் டயாக்ஸின், ஃப்யூரன் நச்சு வாயுக்கள் உயிரினங்களுக்கு சுவாச நோயை உண்டாக்கும் என்பதால் எரிப்பதைக் கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளும் புகையிலா பொங்கல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments