ரஷ்யாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை மீண்டும் சோதனை

0 899

ரஷ்யாவால் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனையை அந்நாட்டு அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார்.

கின்ஜால் (Kinzhal) என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணையை, உலகின் எந்த சக்தியாலும் இடைமறித்து அழிக்க முடியாது என புதின் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் கருங்கடல் மற்றும் வடக்கு கடற்படைகள் கருங்கடலில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டன. அப்போது கலிப் கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் வான்வழி ஏவுகணை கின்ஜால் ஆகியவற்றை ஏவி பயிற்சயில் ஈடுபட்டன.

2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் அந்த ஏவுகணை, மிக் 31 கே ஹெலிகாப்டரில் இருந்து ஏவி மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 40 விமானங்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை இந்தப் பயிற்சிகளில் ஈடுபட்டன.

இந்த சோதனையை கடற்படை கப்பலில் இருந்தபடி ரஷ்ய அதிபர் புதின் பார்வையிட்டார். ஹைப்பர்சோனிக் பொதுவாக Mach 5 வேகம் அல்லது 3,836 மைல் வேகத்திற்கு மேல் வரையறுக்கப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட பின்னர் விண்வெளியில் மேல் நோக்கி சீறி பறக்கின்றன. ஆனால் பின்னர் கீழே வந்து ஒரு விமானத்தை ஒத்த விமான பாதையில் அதிக வேகத்தில் பறக்கின்றன.

விமான பாதையில் இந்த ஏவுகணை அதிவேகத்தில் செல்லும்போது அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடர்கள் என எதன் கண்ணிலும் சிக்காமல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments