சட்டப்பேரவையில், துணை நிதிநிலை அறிக்கைத் தாக்கல்

0 1083

சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கியது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கான நிதியான, 6,580 கோடி ரூபாய்க்கு, சட்டப் பேரவை ஒப்புதல் அளித்தது.

சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித் தடத் திட்டத்தின் கீழ், இரண்டு மின் தொடரமைப்புத் திட்டங்களை நிறுவுவதற்கு அரசு ரூ.4332.57 கோடிக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்காக ரூ.3,266.47 கோடிக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக 206 புள்ளி 53 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments