மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலாத் தலமாக மாறுகிறது அயோத்தி
அயோத்தி நகரை மிகப்பெரிய ஸ்மார்ட் நகரமாக்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
2031ம் ஆண்டு வரை இதற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக 50 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பக்தர்கள் திரளாக அயோத்திக்கு வந்து செல்கின்றனர்.
சரயூ நதிக்கரையில் 151 அடி உயரத்துடன் புதிதாக அமைக்கப்பட உள்ள ராமர் சிலை மற்றும் கோவிலுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தியை புனிதத்தலமாகவும் பல்வேறு அதிநவீன வசதிகள் நிரம்பிய ஸ்மார்ட் நகரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Comments